Youth is easily deceived, because it is quick to hope.!!
“The roots of education are bitter, but the fruit is sweet.”
Youth is easily deceived, because it is quick to hope.!!
“The roots of education are bitter, but the fruit is sweet.”
“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு”
பெத்லகேம் கல்வியியல் கல்லூரியில் தமிழ்த்துறை 2005 - ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இத்துறை செந்தமிழைச் சீர்மல்கப் போற்றி அன்னைத்தமிழை மாணவர்களுக்கு எழுத்தாலும், பேச்சாலும் புகட்டி புது உருவம் அளித்து வருகிறது. கற்றல் கற்பித்தல் முறைகளில் மாணவர் கருத்தரங்கம், பட்டிமன்றம், குழுவிவாதம், இ-கற்றல், காணொலிக் காட்சிவழிக் கற்றல் போன்ற புதுமைகளை புகுத்தி கல்வியில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. பாரதி இலக்கியமன்றம் மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்கும் நோக்கில் இயங்கி வருகின்றது. இக்கழகம் மூலம் மாணவர்களுக்கு இலக்கிய சமூகச் செய்திகள் கொண்டு சேர்க்கப்படுகின்றன. குறிஞ்சி கபிலர் தமிழ் சங்கம் நாமக்கல், தமிழ்நாடு கலை இலக்கிய கழகம் மற்றும் கவிஞன் பதிப்பகம் கொட்டாரத்துடன் இணைந்து மாணவர்களின் படைப்பாற்றலை வளர்த்திட பல்வேறு கலை போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றது. தமிழ்த்துறை அறிவை புகட்டுவதோடு ஒழுக்கம், சுயமரியாதை, மனிதநேய பண்புகளை தன் மாணவர்களிடம் வளர்த்து வருகிறது.
“வளர்க தமிழ்
ஓங்குக அதன் புகழ்”